ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லை வழியாக நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியதாக தெரிகின்றது. இவர்கள் ராணுவ கன்வாய் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அக்னூர் செக்டாரில் நேற்று காலை எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமம் வழியாக ராணுவ கன்வாய் சென்று கொண்டிருந்தது.
அந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கன்வாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கன்வாயின் ஒரு பகுதியாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளே இருந்த வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார்கள்.
தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து கோரின் பட்டால் பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். 3 தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதில் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
The post ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு: தீவிரவாதி சுட்டுக் கொலை appeared first on Dinakaran.