ஜம்மு குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

1 week ago 3

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் அருகே பட்டல் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் உட்பட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணிவெடியை பதுக்கி வைத்த பயங்கரவாதிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களுக்கு ராணுவ அதிகாரிகள் உள்பட வீரர்கள் அனைவரும் மலர் வளையம் வைத்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

Read Entire Article