ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது எந்த அமைப்பு?

4 hours ago 2

புதுடெல்லி,

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 அப்பாவிகள் பலியாகினர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இக்கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தாக்குதல் நடத்தியது எந்த பயங்கரவாத அமைப்பு என புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை துவக்கி உள்ளனர். பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ' தி ரெசிஸ்டென்ஸ் பிராண்ட்(The Resistance Front (TRF))' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Read Entire Article