ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: மெகபூபா முக்தி மகள் பின்னடைவு

3 months ago 24

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா போட்டியிடாத நிலையில், ஸ்ரீகுப்வாரா-பிஜ்பெஹாரா தொகுதியில் அவரது மகள் இல்டிஜா முப்தி முதல்முறையாக போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 8வது சுற்று முடிவுபடி இல்டிஜா முப்தி 17,127 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் பஷீர் அஹ்மத், 22, 194 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 5,067 ஆகும்.

Read Entire Article