ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி ; பிரதமர் மோடி

3 months ago 24

டெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்த கூட்டணி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜக 29 இடங்களில் வெற்றிபெற்று 2ம் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜம்மு-காஷ்மீரில் இந்த தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் நீக்கப்பட்டபின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்கள் பங்களித்திருப்பது ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் செயதிறனை கண்டு நான் பெருமைபடுகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்கள் கட்சி தொண்டர்களின் கடினமான முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல்திறனை நான் பாராட்டுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.

Read Entire Article