
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 6 கிலோ எடையுள்ள உயர் ரக ஹெராயின் என்ற போதைப்பொருளை ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் எல்லைக்கு அப்பால் இருந்து கடத்தப்பட்டு, ஒதுக்குப்புறமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நவ்ஷேரா செக்டாரில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 2 போதைப்பொருள் கடத்தல்காரர்களை சில வாரங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.