ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

3 hours ago 2

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் மழையால் சேதமடைந்தன.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்த 35 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், ‘ராம்பனில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடின நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம். தேவைப்படும் இடங்களில் உடனடி மீட்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article