ஜமீன் எண்டத்தூரில் இருந்து அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை

9 hours ago 2

செய்யூர்: மதுராந்தகம் அருகேயுள்ள ஜமீன் எண்டத்தூர் ஊராட்சியில் தொடங்கி அரியனூர், நகாமலை வழியாக அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் அருகே முதுகரையில் இருந்து கூவத்தூர் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பிரியும் ஜமீன் எண்டத்தூரில் இருந்து ஒழவெட்டி, கல்பட்டு, அரியனூர், பெரியவெண்மணி, நாகமலை, அம்மனூர் வழியாக செய்யூர் வரை நெடுஞ்சாலை உள்ளது. இதில், ஜமீன் எண்டத்தூர் முதல் அம்மனூர் வரையிலான சுமார் 20 கிமீ தொலைவு கொண்ட இந்த நெடுஞ்சாலையை ஒட்டியும், அதன் அருகிலும் சுமார் 5 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக கல்குவாரி லாரிகள், மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் வழியாக சென்று வருகின்றன.

இதனால், அச்சாலை நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது. மேலும், நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதாலும், குவாரிகளில் இருந்து செல்லும் கனகர வாகனங்கள் 3 நிமிட இடைவெளி அல்லது அடுத்தடுத்து வரிசையாகவும் செல்கின்றன. மேலும், அரசு பேருந்துகள் உள்ளிட்ட இதரன வாகனங்கள் என சாலையை தினமும் கடந்து செல்வதால் வாகனங்கள் எதிர் திசையில் வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் சிரம்மத்துக்குள்ளாகின்றன. அரசு பேருந்துகள் எதிரில் வரும்போது ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாத நிலையும் உள்ளது. மேலும், இரவு-பகல் என்று பாராமல் குவாரிகள் செயல்பட்டு வருவதால் குவாரிக்கான கனரக வாகனங்கள் அதிகளவிலும், சாலையின் குறுகிய வளைவுகளில் அதிவேகமாக சென்று வருவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகின்றன.

எனவே, ஜமீன் எண்டத்தூரில் இருந்து அரியனூர், பெரியவெண்மணி, நாகமலை வழியாக அம்மனூர் வரையிலான நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதியும், மேலும் விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படாத வகையில் குறிப்பிட்ட அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடரும் விபத்துகள்
குறிப்பிட்ட சாலைகளில் வளைவுகள் அதிமாக இருப்பதால் வளைவுகளில் வாகனங்கள் வருவது தெரியாமல் மோதிக்கொள்கின்றன. மேலும், விபத்து ஏற்படுவவதுபோல் வந்து அருகருகே நிறுத்தி வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் நிலை தொடர்கிறது. இதுவரை சிறுசிறு விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகின்றன. ஒருசில நேரங்கங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சாலையை விரிவக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரும் விபத்துக்களால் அலறும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

நடவடிக்கை தேவை
சாலைகளில் எம்-சாண்ட், பி-சாண்ட், சரளை கற்கள், ஜல்லி கற்கள், பார் மண் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த லாரிகளால்தான் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இதுபோன்ற அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post ஜமீன் எண்டத்தூரில் இருந்து அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article