ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சோபியா கெனின்

2 months ago 17

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் சோபியா கெனின், பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதினார்.

இதில் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

Read Entire Article