ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் 5.1 ஆக பதிவு

4 weeks ago 9

டோக்கியோ,

ஜப்பானில் உள்ள நோடா பகுதியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் கிழக்கு-வடகிழக்கு திசையில் இன்று காலை 4.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 63.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, கட்டிடங்களில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Read Entire Article