ஜப்பானில் நடக்கும் கடல்சார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காரைக்கால் அரசு பள்ளி மாணவி பங்கேற்பு

1 month ago 5

 

காரைக்கால்,அக்.18:ஜப்பானில் நடக்கும் கடல்சார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கும் காரைக்கால் மாணவிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் நேரில் அழைத்து பாராட்டினர். ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ள தேசிய கடல்சார் களங்கள் விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற இந்தியா முழுவதும் இருந்து ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த ஐந்து மாணவர்களில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த வ.உ.சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஜானவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவி ஜப்பானின் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுனாமி விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு உரை நிகழ்த்த உள்ளார். இந்த மாணவியின் தந்தை சங்கரன் ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இதற்கிடையில் தேர்வு செய்யப்பட்ட மாணவி ஜானவியை காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் மற்றும் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் இருவரும் மாணவியை நேரில் அழைத்து பாராட்டினர்.

The post ஜப்பானில் நடக்கும் கடல்சார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காரைக்கால் அரசு பள்ளி மாணவி பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article