ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு

4 weeks ago 6

டோக்கியோ: டோக்கியோவில் உள்ள ஜப்பானின் ஆளுங்கட்சி தலைமையகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் வரும் 27ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், டோக்கியோவில் ஆளுங்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது 6 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக அங்கிருந்த சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக அந்த நபர் பெட்ரோல் குண்டு வீசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக கட்சி தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை.

The post ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு appeared first on Dinakaran.

Read Entire Article