ஜனாதிபதியை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு சோனியா காந்தி, பப்பு யாதவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: பாஜ எம்பிக்கள் தாக்கல்

2 hours ago 1

புது டெல்லி: ஜனாதிபதி திரவுபதியை இழிவுபடுத்தி பேசிய குற்றம் சாட்டி,முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சுயேச்சை எம்பி பப்பு யாதவுக்கு எதிராக பாஜ எம்பிக்கள் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி பாவம் அவருக்கு பேசும் அளவிற்கு கூட சக்தி இல்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியது.

சோனியா காந்தி இவ்வாறு பேசியதன் மூலம் நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணியை சோனியா காந்தி அவமதித்து விட்டார் என்று பாஜ தலைவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் ஜனாதிபதி மீது சோனியா காந்தி மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். இரண்டு தலைவர்களும் வயதானவர்கள். எனவே அவரை அவமதிக்கும் வகையில் சோனியா காந்தி எதுவும் பேசவில்லை என்று பிரியங்கா காந்தி எம்பி மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியின பாஜ எம்பிக்கள் நேற்று மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஜனாதிபதியை இழிவுபடுத்தி பேசியதற்காக சோனியா காந்திக்கு எதிராக அவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ கூறினார்.

அதே போல் ஜனாதிபதி உரையை காதல் கடிதம் என்று கிண்டலாக கூறிய சுயேச்சை எம்பி பப்பு யாதவ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர் என்று ரிஜிஜூ தெரிவித்தார்.

The post ஜனாதிபதியை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு சோனியா காந்தி, பப்பு யாதவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: பாஜ எம்பிக்கள் தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article