
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:-
ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியுமா? ஜனாதிபதியை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல சுப்ரீம் கோர்ட்டு மாற்றி உள்ளது. சட்டம் இயற்றுவது, நிர்வாக பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்கின்றனர். சூப்பர் பார்லிமெண்ட் போல நீதிபதிகள் செயல்படுகின்றனர்.ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை.என்றார்.
மசோதா தொடர்பான வழக்கில் ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் தன்கர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.