ஜனாதிபதி முர்மு ஊட்டிக்கு நாளை வருகை

2 months ago 12

ஊட்டி: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (27ம் தேதி) டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகிறார்.

பின்னர், 28ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு செல்கிறார். அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார். தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

The post ஜனாதிபதி முர்மு ஊட்டிக்கு நாளை வருகை appeared first on Dinakaran.

Read Entire Article