சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உருவாக்கிய ஜனநாயக அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை முற்றிலும் சீர்குலைக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் நேர்மையும் செயல்பாடுகளும் சிக்கலுக்கு உட்பட்டுள்ளன. நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளில் இந்துத்வா சிந்தனைகள் புகுத்தப்பட்டு, நேருவின் சாதனைகள் மறைக்கப்படுகின்றன. நேருவால் உருவாக்கப்பட்ட இந்தியாவை கட்டிக்காக்க அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்.
The post ஜனநாயக கட்டமைப்புகளை மோடி அரசு சீர்குலைக்கிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.