சோமாலியாவில் இஸ்லாமிய அரசு (IS) தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இது அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.
இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்க்லை என அமெரிக்க நாடுகளின் இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
This morning I ordered precision Military air strikes on the Senior ISIS Attack Planner and other terrorists he recruited and led in Somalia. These killers, who we found hiding in caves, threatened the United States and our Allies. The strikes destroyed the caves they live in,…
— Donald J. Trump (@realDonaldTrump) February 1, 2025
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமுக வலைதள பக்கத்தில் கூறியதாவது;
இன்று காலை நான் சோமாலியாவில் மூத்த ISIS தாக்குதல் திட்டமிடுபவர் மற்றும் அவர் ஆட்சேர்ப்பு செய்து வழிநடத்திய பிற பயங்கரவாதிகள் மீது துல்லியமான இராணுவ வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டேன். குகைகளில் மறைந்திருந்த தீவிரவாதிகள் அமெரிக்காவையும் நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தினர்.
இந்தத் தாக்குதல்கள் அவர்கள் வசிக்கும் குகைகளை அழித்துவிட்டன. மேலும் பல பயங்கரவாதிகளைக் கொன்றன, எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. எங்கள் இராணுவம் பல ஆண்டுகளாக இந்த ISIS தாக்குதல் திட்டமிடுபவரை குறிவைத்து வருகிறது, ஆனால் பைடனும் அவரது கூட்டாளிகளும் விரைவாகத் தேவையான உத்தரவைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தினர். நான் செய்தேன்! ISIS மற்றும் அமெரிக்கர்களைத் தாக்கும் மற்ற அனைவருக்கும் செய்தி என்னவென்றால், “நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம், உங்களைக் கொல்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
The post சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கொலை appeared first on Dinakaran.