கடலூர்: கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோவில் திருப்பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திருப்பணிகள் முடிவடைந்தது கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கபட்டு, அதில் வர்ணம் பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி புண்யாக வாசனம், வாஸ்துசாந்தி, மகா சாந்தி ஹோமம், நடைபெற்ற நிலையில் மாலையில் அங்கு ரார்ப்பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹூதி ஆகிய பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
75 பட்டாச்சாரியார்கள்:
தொடர்ந்து முப்பதாம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் நேற்று முன்தினம் 31-ந்தேதி அக்னிபாராயணம், நித்யஹோமங் கள். மாலையில் கும்ப ஆராதனம் நடைபெற்றது. நேற்று பிப்ரவரி 1-த் தேதி காலையில் அதிவாஸ்த்ரய ஹோமம். மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப் பாடு, மாலையில் சயனாதிவாசம் மற் றும் பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் நடைபெற்றது. இந்த யாகசாலை பூஜையில் திருப்பதி, ஹைதராபாத். பெங்களூரு, சோளிங்கர், ஆரணி, சேலம், சங்ககிரி, நாமக்கல், புதுச்சேரி. சிங்கிரிகுடி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு பூஜைகளை மேற்கொண்டனர். திருக்கோயில் கோபுரங்கள் மண்டபங்கள் வர்ணம் பூசுதல் திருவதிகை தனபால் ஸ்தபதி தலைமையிலன குழுவினர் மேற்கொண்டனர்இ. தற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
இன்று காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கோட்டாட்சியர் அபிநயா, மேயர் சுந்தரி ராஜா ,துணை மேயர் தாமரைச்செல்வன்,
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் சந்திர வேணி, கடலூர் வர்த்தக சங்க தலைவர் ஜி ஆர் கே நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோமதி துரைராஜ், விஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ் ,வள்ளி விலாஸ் ரமேஷ் ,சங்கர் செட்டியார், மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன் ,தனஞ்செயன் ,விஜய சுந்தரம், மாநகர செயலாளர் ராஜா, பொதுக்குழு விக்ரமன், ஞானசேகரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, பாதிரிக்குப்பம் கோவேந்தன், பிஎஸ்என்எல் குழு உறுப்பினர் கோவிந்தன், மூத்த வழக்கறிஞர் சிவமணி ,முகுந்தன், சரவணன், காங்கிரஸ் நகர தலைவர் வேலுசாமி, கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, எஸ் எஸ் பாத்திர கடை திமுக மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், கோயில் நிர்வாக அலுவலர் வேங்கடகிருஷ்ணன் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.