
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) சிறப்பு சலுகை வழங்கப்படும். மேலும், வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், ஏப்ரல் மாதம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும்.
தமிழக அளவில் சொத்து வரி வசூல் செய்வதில் மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.