சொத்து வரி உயர்வை கண்டித்து கடலூரில் 18 இடங்களில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

5 months ago 30

கடலூர்: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று (அக்.8)காலை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான எம் சி சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகி சேவல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடலூரில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொளத்தூர் ராஜேந்திரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

Read Entire Article