சையத் முஷ்டாக் அலி கோப்பை; ஆந்திராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது உத்தரபிரதேசம்

1 month ago 5

பெங்களூரு,

7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா அணிகள் நேரடியாக நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. மேலும், பெங்கால், சண்டிகர், ஆந்திரா, உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

இதில் சண்டிகரை வீழ்த்தி பெங்கால் காலிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், ஆந்திரா - உத்தரபிரதேசம் அணிகளுக்கு இடையிலான காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆந்திரா 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆந்திரா தரப்பில் எஸ்டிஎன்வி பிரசாத்34 ரன்கள் எடுத்தார். உத்தரபிரதேசம் தரப்பில் புவனேஸ்வர் குமார், விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய உத்தரபிரதேசம் 19 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 157 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உத்தரபிரதேசம் தரப்பில் கரண் சர்மா 48 ரன் எடுத்தார். ஆந்திரா தரப்பில் கொடவன்லா சுதர்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசம் காலிறுதிக்கு முன்னேறியது. உத்தரபிரதேச அணி காலிறுதியில் டெல்லியை எதிர்கொள்கிறது.

Read Entire Article