சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருங்கள் டிஜிட்டல் கைது என்பது சட்டத்திலே கிடையாது: பிரதமர் மோடி அறிவுரை

3 weeks ago 4

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது ‘மன் கி பாத்’ மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் நேற்று டிஜிட்டல் கைது குறித்து பேசினார். தற்போது செல்போனில் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், முதியவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், வசதி படைத்தவர்களை குறிவைத்து வீடியோ காலில் அழைத்து, சில குற்ற நடவடிக்கை விசாரணை எனக்கூறி, ஆன்லைனிலேயே நிஜமான விசாரணை நடப்பது போன்ற அமைப்பை ஏற்படுத்தி டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றை ஒலிக்க வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: டிஜிட்டல் கைது மோசடி பேர்வழிகள் பற்றி மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொலி அழைப்பு வாயிலாக விசாரணையை என்றுமே செய்ய மாட்டார்கள். டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது. இது முழுக்கவும் மோசடி.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. உங்களுக்கு இதுபோன்ற அழைப்புகள் வந்தால், தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள். ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். விழிப்புடன் இருங்கள்.

அனிமேஷன் உலகில் இந்திய திறமைசாலிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தேசத்தில் படைப்பாற்றல் அலை வீசிக் கொண்டிருக்கிறது. அனிமேஷன் உலகில் இந்தியாவில் தயாரிப்பது, இந்தியர்களால் உருவாக்கப்படுவது பிரகாசமாக ஜொலிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* முதியோர் சுகாதார காப்பீடு நாளை அறிமுகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் விரிவாக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாளை அறிமுகம் செய்கிறார். இதன் மூலம், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும். இது, நாடு முழுவதும் 6 கோடி மூத்த குடிமக்களுக்கு பயன் அளிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருங்கள் டிஜிட்டல் கைது என்பது சட்டத்திலே கிடையாது: பிரதமர் மோடி அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article