சேலையால் வேலி அமைத்து பயிர்களை காக்கும் விவசாயிகள்

3 months ago 22

 

அரூர், அக்.7: காட்டு விலங்குகளால் ஆபத்தை உணர்ந்து சேலையால், வேலி அமைத்து தோட்டங்களில் விவசாயிகள் பயிர்களை காக்க காவல் இருந்து வருகின்றனர்.
அரூர் ஒன்றியத்தில் மருதிபட்டி, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, பொய்யப்பட்டி, வேடகட்டமடுவு, முல்லைவனம், பையர்நாய்க்கன்பட்டி, மல்லிகாபுரம் ஆகியன வனப்பகுதியில் ஏராளமான மான், முயல், காட்டுபன்றி, காட்டெருமை ஆகியவை வசித்து வருகிறது. இந்த காட்டு விலங்குகள் வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இதனால், ஏற்கனவே வறட்சியால் வாடி கிடக்கும் பயிர்களை காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், வனப்பகுதியையொட்டி, விவசாயிகள் இரவு நேரங்களில், வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிலத்தை சுற்றி மூங்கில் வேலி, கயிறு, கிழந்த புடவைகள் ஆகியவற்றை கட்டியும் குச்சிகளை நட்டு அதில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகளை மாட்டி வைத்துள்ளனர். இதனால் வனவிலங்குகள் வருவது சிறிதளவு குறைந்துள்ளது என கூறினார்.
மேலும் வனவிலங்குகள் விவசாய நிலப்பகுதிக்கு வருவதை தடுக்க காட்டு பகுதியில் வேலி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேலையால் வேலி அமைத்து பயிர்களை காக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Read Entire Article