சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனிடம் நடந்த விசாரணை நிறைவு

8 hours ago 3

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனிடம் நடந்த விசாரணை நிறைவு பெற்றது. சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான ஜெகநாதனிடம் 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. விதிகளை மீறி தனியார் அமைப்பை தொடங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டடதாக துணைவேந்தர் மீது புகார் அளித்தனர். துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. அதே போல மாஜி பதிவாளர் தங்கவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை 12 வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி, துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்தும் வகையில் சம்மன் அனுப்பினார். இன்றும், நாளையும் விசாரணைக்கு வருமாறு கூறியிருந்தார். அதன்படி ஜெகநாதன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் ஊட்டியில் துணைவேந்தர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் செல்லவில்லை.

The post சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனிடம் நடந்த விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article