சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனிடம் காவல் துணை ஆணையரிடம் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரியார் பல்கலை. முறைகேடு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஜெகநாதன் ஆஜராகி உள்ளார். விதிமீறி அமைப்பை தொடங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக துணைவேந்தர் மீது புகார் எழுந்தது. துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று 5 மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனிடம் இன்றும் விசாரணை!! appeared first on Dinakaran.