சேலம், திருச்சி, தஞ்சாவூரில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

4 hours ago 2

சென்னை,

சேலம்:-

சேலம் நகர கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கிச்சிப்பாளையம், நெத்திமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வால்மீகி தெரு, முகமதுபுறா தெரு, பழைய மார்க்கெட் பின்புறம், கருவாட்டு பாலம், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிகுத்தி மெயின் ரோடு ஒருபகுதி, களரம்பட்டி மெயின்ரோடு ஒரு பகுதி, கஸ்தூரிபாய் தெரு, கரிமியா வளாகம், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, எஸ்.எம்.சி. காலனி, லட்சுமி நகர், சத்தியமூர்த்தி நகர், காந்தி மகான் தெரு, நாராயணா நகர், அச்சிராமன் தெரு, பழைய மார்க்கெட், பிள்ளையார் கோவில் தெரு, அண்ணா நகர் ஹவுசிங் போர்டு, நாட்டாமங்கலம் மெயின் ரோடு மற்றும் கரட்டூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி:-

திருச்சி கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தங்ைகயாநகர், உடையான்பட்டி ரோடு, சின்னசாமி உடையார் கார்டன், ஏ.ஆர்.எஸ். நகர், கே.சாத்தனூர், செட்டியபட்டி, பாரிநகர், டோபி காலனி, ஓலையூர், இ.பி. காலனி, இச்சிகாமாலைப்பட்டி, எம்.ஜீ.ஆர். நகர், கலர்பட்டி, குளவாபட்டி, எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி, ராயல் பார்ம்ஸ், கலிங்க நகர், ராஜா நகர், முத்துநகர், அய்மான் கல்லூரி, படுகை, வடுகபட்டி, கருண்யாநகர், கவிபாரதி நகர், அன்பிலார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் திருமானூர் மின் பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் செம்பரை, விநாயகபுரம், நேரு நகர், ஆனந்தபுரம், கோமாகுடி, தேவன்குடி, திண்ணியம், மணக்கொல்லை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:-

திருவையாறு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவையாறு உபகோட்டத்திற்கு உட்பட்ட உதவிமின் பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் நகர் திருவையாறு பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட திருவையாறு நகர் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திருவையாறு, ராயம்பேட்டை, திருப்பழனம், பருத்திக்குடி, காருகுடி, தில்லைஸ்தானம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதேபோல் நடுக்காவேரி மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடுக்கடை, கல்யாணபுரம், சின்னகண்டியூர், பொன்னாவரை, முகமதுபந்தர், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article