
சேலம்,
சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது 2 வயது குழந்தை சிந்துஜா, நேற்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தை மாயமானது. குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடி அலைந்தனர்.
இந்த நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.