*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாதோப்பு அருகே பாழ்வாய்க்கால் பகுதியில் துணை மின் நிலையம், தனியார் மேல்நிலைப்பள்ளி பகுதியில் மைத்துள்ள வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால் வண்ணம் பூச வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு-காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் விபத்துகள் நடைபெறாமல் கட்டுப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர்.
ஆனால் வேகத்தடை மீது வண்ணம் பூசாததால் இதனை அறியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் காவல்துறையினர் உயிர்க்கவசம் தலைக்கவசம் என எச்சரித்தும் வாகன ஓட்டிகள் உயிரை பற்றி கவலைப்படாமல் தலைக்கவசம் இல்லாமலே இருசக்கர வாகனத்தை இயக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி, துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துகள் நடைபெறாமல் இருக்க அமைத்த வேகத்தடை இருப்பது தெரியாமல் பைக்கில் வந்த வாலிபர் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த வரை உடனடியாக ஒரத்தூர் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து தடுமாறி விழுந்து அடிபட்டு வருகின்றனர். வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வர்ணம் பூசி அடையாளம் தெரியுமாறு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சேத்தியாத்தோப்பு அருகே நெடுஞ்சாலை வேகத்தடையில் வர்ணம் பூசாததால் தொடரும் விபத்துகள் appeared first on Dinakaran.