செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

5 hours ago 3

சென்னை,

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமானார். இவர் கடைசியாக நானே வருவேன் படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது ஜிவி பிரகாஷை வைத்து 'மென்டல் மனதில்' என்ற படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கும் ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது. இவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்திருந்த மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

#MentalManadhil shoot kicks off with a blessed pooja ceremony. Stay tuned for exciting updates! ✨A @gvprakash starrer & musical A @selvaraghavan film @gdinesh111 @it_is_madhuri @Arunkrishna_21 @RVijaimurugan @proyuvraaj pic.twitter.com/GwrYD0u3U4

— Parallel Universe Pictures (@ParallelUniPic) December 22, 2024
Read Entire Article