செங்கல்பட்டு: செல்போன் திருடிய 5 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கரும்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி அருகே ஆவின் டீ கடை நடத்தி வருகின்றார். இங்கு டீ குடித்த 5 பேர் கடையில் வேலை செய்து வரும் ஜிதேந்தர் மண்டல் என்பவருடைய செல்போனை நேற்று அதிகாலை திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக, அருணாச்சலம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கைதானவர்கள் செங்கல்பட்டு அருகே அமணம்பாக்கம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவரின் மகன் சஞ்சய் (18),
செங்கல்பட்டு பெரியநத்தம் பாரதிநகரை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கார்த்திக் (19), செங்கல்பட்டு முருகேசனார் தெருவை சேர்ந்த கோநி என்பவரின் மகன் லோகேஷ் (22), செங்கல்பட்டு அடுத்த குன்னவாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் லோகநாதன் (18), செங்கல்பட்டு தட்டான்மலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தீனா (23) என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, இந்த ஐந்து பேர் மீது செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு அருகே செல்போன் திடிய வழக்கில் ஐந்து இளைஞர்கள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post செல்போன் திருடிய 5 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.