
மும்பை,
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர்.
இதில் குஷி கபூர், 'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக்கான 'லவ்யப்பா' மற்றும் சயிப் அலிகானின் மகன் இப்ராகிம் அலிகானுடன் 'நாடானியன்' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு வெளியே சிறுவர்களால் குஷி கபூர் சூழப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், பல சிறுவர்கள் குஷி கபூர் வந்த காரை மறித்து தொலைபேசிகளை அசைத்து, குஷியிடம் செல்பி எடுக்க கார் கண்ணாடியை கீழே இறக்க சொல்வதை காண முடிந்தது. அப்போது சிரிப்புடன் கண்ணாடியை இறக்கி அவர்களுடன் குஷி கபூர் கைகுலுக்கினார். பின்னர் அங்கிருந்து சென்றார்.