செய்யாறு அருகே விபத்து சென்டர் மீடியனில் பஸ் மோதி 20 பேர் படுகாயம்

3 months ago 10

செய்யாறு : செய்யாறு அருகே தூசியில் சாலை சென்டர் மீடியனில் நேற்றிரவு 7 மணி அளவில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளாதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மாலை 6 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டு சென்றது. இரவு சுமார் 7 மணி அளவில் வந்தவாசி சாலையில் சென்றபோது ஐயங்கார் குளம் கூட்ரோட்டில் சாலை நடுவில் இருந்த சென்டர் மீடியனில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இழந்து பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தூசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post செய்யாறு அருகே விபத்து சென்டர் மீடியனில் பஸ் மோதி 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article