செய்யச் சொல்லு, செலவை நாம பார்த்துக்கலாம்..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்

3 months ago 16

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் அவர் வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செம்பியம் போலீசார் இந்த வழக்கில் முதல் குற்றவாளி என கூறப்படும், பிரபல ரவுடியும், ஆயுள் தண்டனை சிறைவாசியுமான வியாசர்பாடி நாகேந்திரன் உள்பட 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான குற்றப் பத்திரிக்கையில் வியாசர்பாடி தாதா நாகேந்திரன் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது. வாக்குமூலத்தில் நாகேந்திரன் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டம் குறித்து வழக்கறிஞர் அருள் கூறியதாக எனது மகன் அஸ்வத்தாமன் என்னிடம் கூறினார்.

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது எனது மகன் சந்தித்து கூறினார். இது தான் நல்ல சான்ஸ் அவுனுங்கள செய்யச் சொல்லு, செலவை நாம பார்த்துக்கலாம் என நான் கூறினேன். ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம். ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயபிரகாஷை துப்பாக்கியை காட்டி அஸ்வத்தம்மன் மிரட்டிய விவகாரத்தில் கைது செய்ய ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம், என்பதால் எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளரை அழைத்து “எனது மகனுக்கு எதாவது ஆச்சுனா நான் எந்த லெவலுக்கும் போவேன் ” என எச்சரித்தேன்… எனது மகன் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வராமல் இருக்க ஆம்ஸ்ட்ராங் தான் காரணம்” கூறியுள்ளார்.

The post செய்யச் சொல்லு, செலவை நாம பார்த்துக்கலாம்..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Read Entire Article