செம்பனார்கோவிலில் மாணவர்களுக்கு மாநில அளவில் சிலம்பம் போட்டி

1 week ago 1

 

செம்பனார்கோயில், பிப்.1: செம்பனார்கோவிலில் மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில்ங 38 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மாணவர்கள் சிலம்பம் மற்றும் வலையப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள், 14 வயது, 17 வயது, 19 வயதுடைய மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற வலையப்பந்து, சிலம்பம், ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, தொடு முறை ஆகிய மூன்று வகை போட்டிகளில் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயலாளர் ஜான்சன், துணை செயலாளர் ஜெயேந்திரன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post செம்பனார்கோவிலில் மாணவர்களுக்கு மாநில அளவில் சிலம்பம் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article