புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது 6.5 சதவீதம் குறைவு ஆகும். இருப்பினும் இந்த மாதம் முதல் பண்டிகை சீசன் வருவதால், வரும் மாதங்களில் வசூல் சிறப்பாக இருக்கும் என வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.63 லட்சம் கோடியாகவும், கடந்த 2024 ஆகஸ்ட் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.75 லட்சம் கோடியாகவும் இருந்தது.
உள்நாட்டு பரிவர்த்தனை, இறக்குமதி ஆகியவை குறைந்துள்ளதால் தான் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாக வரி வசூல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.27 லட்சம் கோடியாக உள்ளது. பொருட்கள் இறக்குமதி மூலம் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,390 கோடியாக உள்ளது. இந்த மாதத்தில் ரூ.20,458 கோடி ரீபண்ட் வழங்கப்பட்டன. ரீபண்ட் கழித்தால் செப்டம்பரில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.53 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம்.
The post செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி appeared first on Dinakaran.