சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, திருவிக நகர் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவ மழை தொடங்கும் முன், மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தென்மேற்கு பருவமழையை ஒட்டி மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம்மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.