சென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு

6 months ago 21

சென்னை,

சென்னையில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவயில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியான அறிவழகனை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே காவலர்களை தாக்கிவிட்டு அறிவழகன் தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் அறிவழகனை காலில் சுட்டுப் பிடித்தனர்.

Read Entire Article