சென்னை: சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் வரும் 7-ம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 7-ம் தேதி மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொள்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.