சென்னையில் மாஞ்சா நூல், ட்ரோன்களுக்கு தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு

3 months ago 13

சென்னை: சென்னையில் வரும் டிச.25ம் தேதி வரை மாஞ்சா நூல் தயாரித்தல், விற்றல் உள்ளிட்டவைக்கும், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் பலரும் உயிரிழக்கும் சூழல் உருவானது. மேலும், பலர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்கவும், பறக்க விடவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதித்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை மீறியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இதையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து, விற்றவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ட்ரோன்கள் பறக்கவும், சிறிய வகை ரிமோட் கண்ட்ரோல் விமானங்கள் ஆகியவை பறக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி அக். 27ம் தேதி முதல், வரும் டிச.25ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

The post சென்னையில் மாஞ்சா நூல், ட்ரோன்களுக்கு தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article