சென்னையில் மழை தொடரும் என தகவல்

5 hours ago 1

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்துள்ளது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம்,வேளச்சேரி,கோயம்பேடு, விருகம்பாக்கம், மதுரவாயல். கிண்டி, பழவந்தங்கல், மீனம்பாக்க, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், வேளச்சேரி, பம்மல், பூந்தமல்லை, ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவலின்படி,

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யும். வட தமிழ்நாட்டில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசையில் இருந்து மேகங்கள் உருவாகி நகருக்குள் நகர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறையும் தமிழ்நாட்டில் இம்மாதம் 25-ம் தேதிக்கு முன்னரே பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

நாமக்கல் 11.8 செ.மீ, தஞ்சை திருவையாறு 11.7 செ.மீ, கள்ளக்குறிச்சி தியாக துருகம் 11.6 செ.மீ, கள்ளக்குறிச்சி கலையநல்லூர் 12.8 செ.மீ, நாமக்கல் ராசிபுரம் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளகுறிச்சி ரிஷி வந்தியத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Read Entire Article