சென்னை: சென்னையில் தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போலிசாரால் கைது செய்யப்பட்டார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கையெழுத்து இயக்கம் துவங்குவதற்கு அறிவிக்கப்பட்டது. சரியாக 10.45 மணிக்கு அவர் வருகை தந்திருந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கூடியிருந்து வருகை தந்தனர். தியராயநகர் துணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் வருகை தந்தனர். இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர்ச்சியாக காவல்துறையினர் முன் அனுமதி பெறவில்லை உடனடியாக இங்கிருந்து புறப்பட வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ச்சியாக காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் என்ன தீவிரவாதியா என்னை ஏன் இத்தனை காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர் என தமிழிசை சௌந்தரராஜன் வினவினார். காவல்துறை முன் அனுமதி பெறாத காரணத்தினால் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக காவல்துறை ஒழிக என பாஜகவினர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாஜக தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவங்கி ஒரு கோடி கையெழுத்துகள் தமிழகம் முழுவதும் பெறப்பட்டு விரைவில் குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று நேற்று கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை துவங்கினார். இரண்டாவது நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் முன்னாள் ஆளுநரும், முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை வாங்க வருகை தந்த அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
The post சென்னையில் போலீசாரின் தடையை மீறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது..!! appeared first on Dinakaran.