சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த துணிக்கடை உரிமையாளர் கைது

2 months ago 10
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் மார்ட்டின் ஜோஸ்வா என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து மெத்தம்பெட்டமைன், ஓஜி கஞ்சா மற்றும் LSD Stamp ஆகிய போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மார்ட்டினுக்கு போதைபொருள் வழங்கியதாக பெங்களூருவில் பிபிஏ படித்து வரும் சின்னசேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சூர்யாவும் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருள்களை விநியோகித்து வரும் நைஜீரியாவைச் சேர்ந்த கும்பலை பிடிக்க தனிப்படை பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Read Entire Article