
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு நேற்றிரவு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பேரும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.