
சென்னையில் நாளை 2 இடங்களில் போர் சூழல் ஒத்திகை நடைபெறும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. சென்னை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒத்திகை நடக்கிறது. உள்துறை அமைச்சக அறிவுரைப்படி நாளை மாலை 4 மணிக்கு ஒத்திகை நடைபெறும். ஒத்திகை குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம். பிற அனைத்து செயல்பாடுகளும் இயங்கும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.