சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சம்; நகை பிரியர்கள் அதிர்ச்சி…!

3 hours ago 1

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது. அக்டோபர் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலை இந்த மாதமும் நீடித்து வருகிறது. கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ.200, 15ம் தேதி சவரனுக்கு ரூ.80, 16ம் தேதி சவரனுக்கு ரூ.400, 17-ம் தேதி சவரனுக்கு ரூ.480 என உயர்ந்து சவரன் ரூ.59,600க்கும் விற்பனையானது.

வார இறுதிநாளான 18-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,435க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.59,480க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (24.01.2025) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7555-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7555-க்கும் சவரன் ரூ.60,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 240 உயர்ந்து 60,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,525-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 7555-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.104-க்கு இருந்த நிலையில், இன்று ரூ.1 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனையாகிறது.

 

The post சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சம்; நகை பிரியர்கள் அதிர்ச்சி…! appeared first on Dinakaran.

Read Entire Article