சென்னை: போரூர் சுங்கச்சாவடி முன்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 100-க்கும் மேற்பட்ட தவெகவினர் மீது மதுர வாயல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போரூர் சுங்கச்சாவடி முன்பு நேற்று முன்தினம் வரவேற்பு அளித்து தவெக கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிரேன் மூலம் 15 அடி பிரம்மாண்ட மாலையை அணிவித்தும் ஜேசிபி மூலம் மலர்களைத் தூவியும் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் கொடியுடன் பங்கேற்றனர். இதன் காரணமாக, மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.