சென்னையில் எல்லை மீறும் கல்லூரி மாணவர்கள்: பேருந்தின் மீது ஏறி அராஜகம்

3 months ago 19

சென்னை: சென்னை கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே இன்று மதியம் 2 மணியளவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திநகரிலிருந்து குன்றத்தூர் செல்லும் 88k பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சம் அடித்து பேருந்தை விட்டு கீழே இரங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ கட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ரூட்டு தல பிச்சனை காரணமாக மாநில கல்லூரி மாணவர்களை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கியதால் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது, மேலும் மாநகர பேருந்தில் மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் எல்லை மீறும் கல்லூரி மாணவர்கள்: பேருந்தின் மீது ஏறி அராஜகம் appeared first on Dinakaran.

Read Entire Article