சென்னை: சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையகத்தின் புதிய தலைவராக மூத்த கடற்படை அதிகாரி கமாடோர் சுரேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
கமாடோர் சுரேஷ் கடற்படையில் பணிபுரிந்தபோது தளவாடங்களை கையாளுவது, படைகளை அனுப்புவது, செயல் திட்ட உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் போதிய அனுபவம் பெற்றவர். அத்துடன், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், தேசிய பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் திறன் பெற்றவர்.