சென்னையில் இன்று குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்

1 week ago 4

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ,

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் 2-வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம்   இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விவரம் வருமாறு,

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்.இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் பிரச்சினை, குடிநீர்-கழிவுநீர் வரி மற்றும் கட்டணம், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article