சென்னை :சென்னையில் இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 273 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.81 கோடியில் 204 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 307 பூங்காக்கள் ரூ.24 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார். மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னையில் ரூ.2,000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
The post சென்னையில் இந்த நிதியாண்டில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது : அமைச்சர் கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.